மாவட்டங்களுக்கு இடையிலான படைப்பாற்றல் போட்டியில் முதலிடம் பெற்று, கோவை அஜ்ஜனூர் பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
47வது கோயம்புத்தூர் மண்டல சகோதயா படைப்பாற்றல் போட்டியில், பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ஆஸ்ரேயாதாஸ், ‘ஆ’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கோவை மண்டலத்தைச் சேர்ந்த 34 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டியில், ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஆ’ பிரிவில் பங்கேற்ற ஆஸ்ரேயாதாஸ், முதலிடத்தைக் கைப்பற்றினார். மாணவியின் சாதனையைப் பாராட்டி, பள்ளி முதல்வர் வித்யாசங்கர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
