மேட்டுப்பாளையத்தில் உள்ள வள்ளுவர் ஆரம்ப நிலை பள்ளியில் சிறுநீர் தொற்று மற்றும் கழிப்பறை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, எல்.சி மருத்துவ அறக்கட்டளை சார்பில் ஏற்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி கழிப்பறையை எளிதில் சுத்தம் செய்யும் கம்ப்ரஸர் உபகரணம் இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் டாக்டர் வித்யா ராஜன் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து நான் உயிர்க்காவலன் திட்டத்தின் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றனர்.