கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால், கால்வாய்களில் மழைக் காலங்களில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருச்சி சாலை இட்டேரி பகுதியில் அமைந்துள்ள நீர்வரத்து கால்வாயில், சுமார் 2.3 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாய் பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள், புதர்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

செல்வசிந்தாமணி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் செல்வசிந்தாமணி குளத்திலிருந்து உக்கடம் பெரியகுளம் செல்லும் ராஜவாய்க்கால் சுமார் 1.7 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாய் பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள், புதர்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

