டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. தமிழக அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் செயல் உறுப்பினர் வின்சென்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி இந்நிகழ்விற்குத் தலைமையேற்றார். இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இளங்கலை 1903, முதுகலை 390, முனைவர் பட்டம் 12, மொத்தமாக 2305 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.