பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லூரி மற்றும் யெஸ் பொள்ளாச்சி சார்பில், ”மாலையில் ஓர் ஞானம்” என்ற தலைப்பில் இளம் தொழில்முனைவோர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிம்ஸ் கல்லூரி தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், யெஸ் அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்களிடம் கலந்துரையாடினார்.
அதில் தொழில், கல்வி, சமூக மற்றும் கலாச்சார துறைகளில் தமக்குள்ள அனுபவங்களை பகிர்ந்தார். தொழில் துறையில் உள்ள பிரச்சனைகள், அதனை எதிர்கொள்வது, முடிவெடுக்கும் திறன், தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்தும் விவரித்தார்.
வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக நேர்மை, நம்பிக்கை போன்ற பண்புகள் மிக முக்கியம். அன்றைய வணிகத்திற்கும், இன்றைய நவீன வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள், நாம் அதில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், இன்றைய காலத்திற்க்கு ஏற்ப நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதில் முன்னேறுவது குறித்தும் விவரித்தார்.
யெஸ் அமைப்பின் தலைவர் சிவகணேஷ் சஞ்சயன், துணைத் தலைவர் சிவநாதியன், செயலாளர் லோகேஸ், சிம்ஸ் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் சர்மிளா, இயக்குனர் (பொ), தியாகு, முதல்வர் மாணிக்கசெழியன், இயக்குனர் சரவணபாபு, மேலாளர் ரகுநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
