அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் ஐடியா லேப் ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் மேம்பாட்டு பயிற்சி இந்துஸ்தான் ஐடியா லேப் சார்பாக இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் மாணவர்களின் புதிய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் முறைகளை ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்துஸ்தான் ஐடியா லேபில் உள்ள முப்பரிமாண இயந்திரம், லேசர் கட்டிங் மெஷின், முப்பரிமாண ஸ்கேனிங் மெஷின் போன்ற தொழில்நுட்ப இயந்திரங்களை இயக்குவதற்கான முழு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக இருந்து ஓய்வு பெற்ற சதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பிரியா சதீஸ்பிரபு முன்னிலை வகித்தார்.
மேலும், இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயா, டீன் மகுடீஸ்வரன், ஐடியா லேபின் ஆசிரியர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.