கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் காட்டு யானைகளின் வருகையால் விவசாய நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, விவசாயிகள் மின்வேலி அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் இருந்து கேரளா மாநிலம் ஆனைகட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள மாங்கரையின் அருகே, டைமண்ட் ஃபேக்டரியில் அமைக்கப்பட்ட மின்வேலியில் ஒரு கிளி சிக்கி உயிரிழந்தது. அந்த மின்வேலியில் பறந்த கிளி மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் மட்டும் மின்சாரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், பகல் நேரத்தில் மின்சாரம் பாய்ந்ததால் கிளி உயிரிழந்ததா என்பதற்கான விசாரணை தொடர்கின்றது.