ஜானகியம்மாள் கல்லூரியில் ‘யுவாஉத்சவ்-25’ நிகழ்ச்சியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களுக்குக் கோப்பை வழங்கி பாராட்டுகிறார் சிறப்பு விருந்தினர் நடிகர் அருண் விஜய்.
வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘யுவாஉத்சவ்-25’ அனைத்துக் கல்லூரிகளுக்கிடையிலான கலாச்சார விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவை கல்லூரி முதல்வர் சதீஷ்குமார், துணை முதல்வர் வாசுதேவன், கல்வி ஒருங்கிணைப்பாளர் கௌரிப்ரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டார்.
விழாவில், அடாப்ட்யூன், முக வரைகலை, ஆடை அணிவகுப்பு, தமிழ் விவாதம், தனி நடனம், குழு நடனம், பாட்டு, பேண்ட், மெஹந்தி, குறும்படம், மணப்பெண் ஒப்பனை, முகக்கலை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வேறு போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.