கோவை குற்றாலம் அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருவி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து சீராகும் வரை மூடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் (மே 25, 26) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் அதிகனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.