ரிட்டையர்மென்ட் துறைக்கு தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் கோவையில் புதிய பணிஓய்வு திட்ட நிர்வாகம் மற்றும் முக்கிய தயாரிப்பு மேம்பாட்டு மையத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
புதிய மையமானது 70 ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கும். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின், இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் பலராமன் ஜெயராமன் கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வணிகச் சேவைகளை உறுதி செய்யும் அதே நேரத்தில், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல திறமைசாலிகளை பணிக்கு ஈர்ப்பதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கும் எங்களது ஆற்றலுக்கு இந்த கோயம்புத்தூர் மையம் மேலும் வலு சேர்க்கிறது.
வேகமாக வளர்ந்து வரும் காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில், 55க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் நிறுவனங்கள் உள்ளன. சுமார் 47,000 ரிட்டையர்மென்ட் திட்டங்கள் மற்றும் அமெரிக்கா முழுவதும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது என்றார்.
இணை நிறுவனரும், தலைமை ஸ்ட்ராட்டஜி அலுவலருமான சந்திரசேகர் வைத்தியநாதன், இந்த மையம் ரிட்டையர்மென்ட் சேவை வழங்குநர்களுக்கு செயல்பாடுகளை நவீனப்படுத்துதல், பங்கேற்பாளர் விளைவுகளை மேம்படுத்துதல், மற்றும் திறம்பட விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றில் உதவ வேண்டும் என்கிற எங்கள் தொலைநோக்கு சிந்தனைக்கு மேலும் வலுவூட்டுகிறது என்று தெரிவித்தார்.
