திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் போட்டியின்றி சுப்பிரமணியன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதனை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கேசிஎம் சீனிவாசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கு வருகை புரிந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்புகளை விரிவாக கேட்டறிந்து, தங்களின் கட்சி மேலிடம் வாயிலாக இங்குள்ள சூழலை பற்றி எடுத்து கூறியுள்ளதையும், தகவல்களை பரிமாறி வருவதாகவும், விரைவில் நல்லதொரு அறிவிப்பு வரும் என தெரிவித்தனர்

சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பின்னலாடை தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளதற்கு, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு சுப்பிரமணியன் நன்றி தெரிவித்தார்