கோவையில் இந்த வாரம் வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பசலன மழையை மட்டும் காணவில்லையே என்ற வருத்தம் பலரிடம் உள்ளது.
இவ்வாறு மழையை எதிர்பார்ப்போர் மகிழும் படி ஒரு தகவலை கூறியுள்ளார் கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்.

அவர் கூறியாதாவது:-

வியாழன் (9.4.26) முதல் ஞாயிறு வரை கோவை மாநகரில் ஆங்காங்கே வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளது. இடி, மின்னல், காற்றுடன் மழை பொழிவு இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள இடங்களில் சற்று அதிகமாகவே மழை இருக்கும்.

இந்த வாரம் 37° செல்ஸியஸ் வெப்பம் நிலவும் நிலையில் அடுத்த வாரம் முதல் 1° கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. இனி வரக்கூடிய நாட்கள் கோடையின் தீவிரத் தாக்கம் உடைய நாட்களாக இருக்கும்.