கோவை நேரு ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசுப் பணியாளர்கள் என 5 பிரிவுகளில் 178 வகையான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கோவை மாவட்ட அத்லெடிக் தடகள சங்கம் டெக்னிகல் சேர்மன் சீனிவாசன், தடகள சங்கம் செயலாளர் சம்சுதீன், பொருளாளர் ஜான் சிங்கராயர், கோவை மாவட்ட உடற்கல்வி அலுவலர் குமரேசன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் உடற்கல்வி டைரக்டர் கருணா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விளையாட்டு ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.