இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வர்த்தகம் மற்றும் தொழில்முறை கணக்கியல் துறையின் வர்த்தக சங்க தொடக்க விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருப்பூர் NIFT-TEA அட்டல் இன்கியுபேஷன் சென்டர் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் குமார் கலந்துகொண்டார். புதிய நிர்வாகிகள் அடையாளச் சின்னம் பெற்று சங்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வில் முதல்வர் பொன்னுசாமி, துறைத் தலைவர் பிரியா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.