கர்நாடக மாநிலம் சிருங்கேரி அருகே ஹரிஹரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதிசங்கராச்சார்ய சாரதா லஷ்மி நரசிம்ம பீடாதிபதி ஸ்ரீஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிகளின் ஜென்ம தின வைபவம், கோவை ராம்நகரில் உள்ள ஸ்ரீஐயப்ப பூஜா சங்க வளாகத்தில் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை  நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக மகா சுவாமிகள் வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு கோவை ஸ்ரீஐயப்ப பூஜா சங்கம் வருகிறார். அன்று மாலை 5.30 மணியளவில் கலைமாமணி லலிதா,  கலைமாமணி நந்தினி ஆகியோரது வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7.30 மணிக்கு ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜை நடைபெற உள்ளது.

21ம் தேதி காலை 8.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, கொங்கு மண்டல நாம சங்கீர்த்தன குழுவினரின் அகண்ட நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்கிறது.

காலை 11.30 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு, மதியம் 12 மணிக்கு ஊஞ்சல் சேவை, மாலை மாற்றுதல் நிகழ்ச்சிகளும், மாலை 3 மணியளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் மகா சுவாமிகள், பக்தர்களுடன் சேர்ந்து நகர்வலம் வருகிறார். மாலை 7.30 மணிக்கு  ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜை நடைபெற உள்ளது.

22ம் தேதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீமகா சுவாமிகள் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளிக்கிறார். காலை 9.30 மணிக்கு லக்ஷ்மி நரசிம்ம சகஸ்ரநாம பாராயணம், 10.30 மணிக்கு சண்டிகா ஹோமம், ஆயுஷ் ஹோமம் ஆகியவை நடைபெற உள்ளன.

காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீகல்யாணராமனின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற உள்ளது. மதியம் 12.30 மணிக்கு மகா சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். மாலை 5.30 மணிக்கு ஸ்ரீமதி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தின் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சியும், மாலை 7.30 மணிக்கு ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜையும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி  தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் 99440 99989 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.