மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தொழில் வளர்ச்சி கவுன்சில்கள் இணைந்து நடத்தும் ‘பாரத் டெக்ஸ் 2025’ கண்காட்சி நேற்று தொடங்கியது. இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சி வரும் 17ம் தேதி வரை தொடரும்.
பாரத் மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில், பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கான பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஏக்ஸ்போர்ட்டர்கள்ஸ் அசோசியேஷன் கௌரவ தலைவர் டாக்டர். ஏ. சக்திவேல், தலைவர் கே. எம். சுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ராஜ்குமார் ராமசாமி, வி. இளங்கோவன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.