சித்தாபுதூர் ஶ்ரீ ஜெகநாத பெருமாள் கோவில், 1913 ஆண்டு ரங்கப்பநாயுடு, அவரது குடும்பத்தினரும் சேர்ந்து பஜனை கோவிலாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.

கடந்த 112 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தக் கோவிலில் பஜனைகள் நடந்து வருகிறது. அதபோல் இந்த ஆண்டு 113 ஆம் ஆண்டும் இன்றும்,  நாளையும் (ஞாயிறு) நடைபெற  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை, 12 பள்ளிக்குழந்தைகள் பங்கேற்கும் பஜனை போட்டிகள் நடைபெற்று, சிறந்த பள்ளிக்கு பரிசுகள் வழங்கப்படும்.

நாளை காலை 7 மணிக்கு ஆரம்பித்து ராமநாதபுரம் ஶ்ரீ நரசிங்கப் பெருமாள் கோவில், இடிகரை ஶ்ரீ பள்ளிகொண்ட அரங்கநாதப்பெருமாள் கோவில், தருமபுரி தேங்காய்மரத்துப்பட்டி ஸ்ரீ பண்டரி பஜனைகோஷ்டி, காரமடை ஸ்ரீநிவாசபெருமாள் கோஷ்டி, சென்னை ஸ்ரீமதி புவனேஸ்வரி குழுவினர், கோவிந்தாபுரம் ஸ்ரீமுரளிதரதாஸ் குழுவினர் ஆகிய பஜனை கோஷ்டியார் கலந்து கொள்ள உள்ளார்கள். பஜனை விழாவில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

நிகழ்வுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும், சிற்றுண்டி, தேநீர் உட்பட அனைத்து வசதிகளையும் கோவிலின் நீர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, பஜனை கோஷ்டி தலைவர் சந்திரசேகர் மற்றும் பஜனை கோஷ்டியார் ஏற்பாடு செய்துள்ளனர்.