கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைக்கிறார் என அமைச்சர் வேலு கூறியுள்ளார். உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸில் வரையிலான சுமார் 10 கி.மீ துாரத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: அவினாசி சாலை மேம்பால கட்டுமான பணிகள் 4 ஆண்டுகளில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். 9 மாதங்கள் தாமதம் ஆகிவிட்டது. சிப்டிங் பணிகள், மின்சார இணைப்புகள், நில எடுப்பு பணிகள் உள்ளிட்டவைகளில் தாமதம் ஏற்பட்டது. ரயில்வே துறையிலும் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
கோவைக்கு அடுத்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிறார். அதைக் கருத்தில் கொண்டு அவினாசி சாலை மேம்பாலம் திறப்பு விழா முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 9ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார். பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. ஓரிரு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடித்துவிடும் எனக் கூறினார்.
