ஃப்ராடெர்னிட்டி மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் (FMAE) மற்றும் குமரகுரு கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவில் முதன்மையான வாகனத் தயாரிப்பு போட்டியை நடத்தியது. போக்குவரத்தின் எதிர்காலம் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகள் போன்ற முக்கியத்துவங்கள், ஆகியவற்றில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாகவும், வாகன தயாரிப்பில் தொழில்முனைவோராக உருவாக்கவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை FMAE-உடன் இணைந்து குமரகுரு கல்லூரி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.