சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்துப் போட்டி, நடைபெற்றது.

2b 3 scaled

சிறப்பு விருந்தினராகப் பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைப் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் சுகுணா நிறுவனங்களின் தலைவர் லட்சுமிநாராயணசாமி, தாளாளர் சுகுணா, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜலு, டீன் ரம்யா சந்தோஷ் மற்றும் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2a 2 scaled

16-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கிரசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும், டி.ஆர்.ஜி. மெட்ரிகுலேஷன் பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றன.

2c 2 scaled

வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்குக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பள்ளி அணிகளுக்கும் சான்றிதழ்கள், நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டன.