உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.ஜி மருத்துவமனையின் பிசியோதெரபி துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

“இருதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பது, மேலாண்மை செய்வது மற்றும் மறுவாழ்வு அளிப்பது” இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக அமைந்தது.

நிகழ்ச்சியின் மூலம் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பதிலும், அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்விலும் பிசியோதெரபியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆரம்ப நிலையிலேயே வழங்கப்படும் மறுவாழ்வு சிகிச்சை, உடல் இயக்கத்தை மேம்படுத்தவும், சுயசார்பை அதிகரிக்கவும், நோயாளிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முக்கிய பங்காற்றுகிறது என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுப்பா ராவ், பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், தடுப்பு இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன், சமூக மருத்துவத்தின் பேராசிரியர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் சுதா ராமலிங்கம், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.