கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் கணினித் தொழிற்நுட்பத் துறையும் இணைந்து காடுவெட்டிபாளையத்தில் உள்ள ஆலயத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
மாணவர்கள் சமூகத்திற்கு உண்டான பணிகளைத் திறம்பட செய்யும் பொழுதே தமக்கான ஆளுமைத் திறத்தை உணர்ந்து கொள்கிறார்கள் எனக்கூறி கல்லூரியின் முதல்வர் கீதா வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் காடுவெட்டிப்பாளையத்தின் பஞ்சாயத்துச் செயலர் கோபால்சாமி கலந்துகொண்டு, இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றிச் சமூகத்தின் உயர்வுக்குத் துணை நிற்க வேண்டும் எனக் கூறினார்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்குமார், கணினித் தொழில்நுட்பத் துறைத்தலைவர் மகேஸ்வரி ஒருங்கிணைத்தனர்.
