ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய பூக்களத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.

கொச்சியில் உள்ள ஃபோரம் மாலில் சுமார் 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி, 30 அடி விட்டத்தில் பிரம்மாண்டமான முண்டுக்கலம் ஆகஸ்ட் 9 அன்று உருவாக்கப்பட்டது.

ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தீர்ப்பாளர் சஞ்சய் போலா, சான்றிதழ் மற்றும் விருதினை, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர்க்கு வழங்கப்பட்டது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் கூறியதாவது: வேட்டி என்பது வெறும் ஆடை அல்ல; அது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். கிட்டத்தட்ட 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி முண்டுக்கலத்தை உருவாக்கியதன் மூலம், ஓணத்தின் கொண்டாட்ட உணர்வையும் வேட்டியின் கலாசாரத்தையும் ஒரே நிகழ்வில் ஒன்றிணைக்க முடிந்தது என்றார்.