பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 1969-ஆம் ஆண்டு பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களின் 56-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி, கே.ஜி. குழுமங்களின் தலைவர் கண்ணப்பன் தலைமையில் ஆகஸ்ட் மாதம் 9, 10 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இந்த ஆண்டு 35 முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தங்களுக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களுடன் இரவு விருந்து உண்டனர். மேலும் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் முதுமையில் மகிழ்ச்சியுடன் இருக்க செய்யவேண்டியவை குறித்து ஆலோசனை வழங்கினர்.
1969-ஆம் ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் ஆண்டுதோறும் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்வதோடு பல சமுதாயப் பணிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில், சக மாணவர்களிடம் ரூ.50 லட்சம் வசூல் செய்து வங்கியில் டெபாசிட் செய்து, கிடைக்கும் வட்டித் தொகையை முன்னாள் மாணவர் சங்கம் மூலமாக இன்னாள் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குகின்றனர். இன்னும் பல பணிகளை செய்துவரும் நிலையில், இந்த ஆண்டும் சில சமுதாயப்பணிகள் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
