திமுக ஆதரவுடன் முதலமைச்சர் ஆக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார், அதை நாங்கள் ஏற்கவில்லை என சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் குழு கூறிய நிலையில், அதற்கு பதிலடி தரும் விதமாக அதிமுக தலைமையிடம் இருந்து ஒரு பதிவு எக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ளது.

அதில், சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற முடியாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது, திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வந்துள்ளது, அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு காத்து  கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா? என அந்த பதிவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

“கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?”

“நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்?”

“எடப்பாடி பழனிச்சாமி தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர். எடப்பாடியாரால் தான் தொண்டர்கள், எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்”. “இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.