ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “அஹம் பிரவாஹினி – நதியின் கவி நார்த்தனம்” என்ற நாட்டிய நிகழ்ச்சி,கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

IMG 20260712 WA0029 scaled

பிரபல நாட்டிய கலைஞர் ஷோபனா பாலச்சந்திரா தலைமையிலான குழுவினர் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

IMG 20260712 WA0031 scaled

மலையில் தோன்றி பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து கடலில் கலக்கும் ஒரு நதியின் பயணத்தையும், அதன் உள்ளார்ந்த உணர்வுகளையும் நாட்டிய வடிவில் கலைநயத்துடன் வெளிப்படுத்தினர்.

IMG 20260712 WA0035 scaled

இயற்கை, பண்பாடு மற்றும் மனித வாழ்வுடன் நதிக்குள்ள ஆழமான பிணைப்பை எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நாட்டிய நிகழ்ச்சி, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

IMG 20260712 WA0025 scaled

நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சியை ரசித்தனர்.