கோவை வேளாண் அறிவியல் நிலையம் மூலம் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் நிகழ்ச்சி பல்வேறு கிராமங்களில், கரீப் பருவத்திற்கான வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள சொக்கனூர், வடசித்தூர், பெருமதி ஆகிய கிராமங்களில் இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நிகழ்வில் வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மை, மண்வளம் மேம்பாடு, புதிய ரகங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றியும், மத்திய மாநில அரசின் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி இசபெல்லா கலந்து கொண்டு பருத்தி சம்பந்தமான தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். மத்திய கரும்பு இன விருத்தி நிலையம் கோவை நிலையத்திலிருந்து முதுநிலை விஞ்ஞானி சோபா குமாரி கலந்து கொண்டு கரும்பில் உள்ள உயர் தொழில்நுட்பங்களை பற்றி எடுத்துரைத்தார். இந்திய உழவர் உர கூட்டுறவு லிமிடெட் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளித்தல் பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.