ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மக்களிடையே உறுப்புதானத்தின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பல முயற்சிகளை முன்னெடுத்து, அதில் வெற்றி பெற்று வருகிறது.
நமது நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தை மேலும் ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமயிலான தமிழ்நாடு அரசு 2023 செப்டம்பர் முதல் மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்த நபர்களின் உடலுக்கு அவர்களின் இறுதி சடங்குகளின் போது அரசு மரியாதை அளிக்கப்படும் என அறிவித்தது.
இதன் காரணமாக எதிர்பாராத விபத்துகளில் மூளை சாவடைந்த பலரின் குடும்பத்தினரும் இன்று இறந்த நபரின் உடலுறுப்பை தானமாக வழங்க முன்வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், 2009ல் துணை முதலமைச்சராக இருந்த போது உடல் உறுப்பு தானம் செய்ய தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பதிவு செய்துள்ளார்.
மக்களிடம் உன்னத தானமான உறுப்புதானத்தை செய்ய அவர்களாக முன்வந்து பதிவு செய்துகொள்ளும் நோக்கில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தேசிய அளவில் மிகப்பெரும் முயற்சியை இந்த ஆண்டு முன்னெடுத்தது.
இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இந்த முயற்சியின் மூலம் 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 45,861 பேரிடமிருந்து உறுப்புதான உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இதை ஓர் உலக சாதனை என உறுதி செய்து வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் அமைப்பு அதிகாரப்பூர்வ சான்றளித்துள்ளது.
இதுபோன்ற சமுதாய அக்கறையுடன் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை பாராட்டும் விதமாக, இந்த மருத்துவமனையை நடத்தும் எஸ்.என்.ஆர்.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
