நிர்மலா மகளிர் கல்லூரியில் விபத்தில்லா கோவை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட ரங்கபிரபு, முகேஷ் மகேந்திரன் ஆகியோர் சாலைப் பாதுகாப்பு குறித்து பேசினர்.
பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, போஸ்டர் தயாரித்தல் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றோருக்குக் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரி பபியோலா, தமிழ்த்துறை தலைவர் மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
