திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரத்தை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா பிரச்சாரம் செய்தார்.

பொதுமக்கள் மற்றும் கட்சியினர் முன்பு பேசிய ஆ.ராசா, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து உரையாற்றினார். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை பற்றி அவர் பேசினார்.

kavitha 2 scaled

அவர் பேசுகையில், குடும்பங்களை பராமரிக்கும் பெரிய பொறுப்பை பெண்கள் சிறப்பாக செய்கின்றனர்.  ஆண் என்னதான் ரூ.1 லட்சம் சம்பாதித்து கொடுத்தாலும், பெண் ரூ.10 லட்சத்துக்கு இணையான பணிகளை வீட்டில் செய்து, குடும்பத்தை பராமரிப்பவராக உள்ளார். அப்படி குடும்பங்களை கட்டியெழுப்பும் பெண்களுக்கு சேரவேண்டிய உரிமைகள் அதிகம் உள்ளது. அவர்களுக்கான உரிமையை சேர்க்கவே திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொண்டுவந்தது, என பேசினார்.

அதே போல அரசு வழங்கும் இலவச மடிக்கணினி திட்டம் மூலம் இளம் பெண்கள் அடையும் அறிவுபூர்வமான முன்னேற்றம் பற்றியும் அவர் உரையாற்றினார்.