கோடைக்காலம் நிகழ்ந்துவருகிறது. காலையில் மோரும், இளநீரும், பழச்சாறும் இரவு நேரங்களில் ஏ.சி.யும்  இல்லாமல் இருப்பது சவாலான காரியம் என பலரும் கூறுவதை கேட்கமுடிகிறது.

வரக்கூடிய நாட்கள் (16.3.26 – 22.3.26) கோவை மாநகரில் வானிலை எப்படி இருக்கும் என இளம் வானிலை ஆய்வாளர் சுஜய்-யிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது :-

நாளை (17.3.26) முதல் 34° செல்ஸியஸ் – 35° செல்ஸியஸ் வெப்பம் மாநகரில் நிலவும். காற்றில் ஈரப்பதம் நன்கு இருக்குமென்பதால் நாளை முதல் வெள்ளி வரை மாநகரில் ஆங்காங்கே வெப்ப சலன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈரப்பதம் இருப்பதால் புழுக்கம் அதிகமாகவும் இருக்கும். அதிகாலை நேரங்கள் சற்று சௌகரியமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.