கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற, விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 266 வது ஜெயந்தி விழாவில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் கோவை கிழக்கு மாவட்ட இயக்கம் மனோகரன்,இளைஞரணி செயலாளர் வேல்முருகன்,இளைஞரணி துணை செயலாளர் இரா.சக்திவேல், முத்துப்பாண்டி,அமுதா முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.