ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2024 இறுதி போட்டி கேரளா காஞ்சிரப்பள்ளியில் உள்ள அமல் ஜோதி பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 10 முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த ஹேக்கத்தானில் 160 மாணவர்களைக் கொண்ட 26 பிரிவினர் கலந்து கொண்டனர்.
“செலவு குறைந்த மயோ எலக்ட்ரிக் புரோஸ்தீசிஸ்” என்ற தலைப்பில், எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த பிளாக் அணி தீர்வு கண்டு, 1 லட்சம் பரிசுத் தொகையுடன் வெற்றி பெற்றது.
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த அபிஷேக், அர்ச்சனா, ஹம்சினி, மனோஜ் குமார் மற்றும் ரோஹித் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் இருந்து அருணேஸ்வரன் ஆகியோர் குழுவில் உள்ளனர். இந்த ஹேக்கத்தான் இணை பேராசிரியர் மனோகரன் மற்றும் யோய் ரோபோடிக்ஸ் ரோபோட் பொறியாளர் காட்வின் மதுபாலன் ஆகிய இருவராலும் வழிகாட்டப்பட்டது.