எமரால்டு நிறுவனத்தின் கிரிஷா அறக்கட்டளையின் மூலம் சி எஸ் ஆர் திட்டத்தின் உதவியுடன் செயல்படும் எமரால்டு மருத்துவ நல மையத்தின் சார்பாக உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை எமரால்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் சிறப்புரையாற்றி கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி எமரால்டு மருத்துவ நலம் மையத்தில் தொடங்கி துடியலூர் வரையில் சென்று பிறகு துடியலூரில் இருந்து எமரால்டு மருத்துவ நல மையத்தில் நிறைவு பெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சக்தி சீனிவாசன், இயக்குனர் நிஸ்டா சீனிவாசன் கலந்து கொண்டனர். எமரால்டு மருத்துவ நல மையத்தின் மருத்துவர் ராதிகா, யூ.ஐ.டி கல்லூரியின் தலைவர் மற்றும் முதல்வர் கலந்து கொண்டனர்.
சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் இதய வடிவிலான பலூன்களை கையில் ஏந்தி கொண்டும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த உலக இதய தினத்தை முன்னிட்டு எமரால்டு மருத்துவ நல மையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் 29 -9- 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.