கோவையின் பிரபல நீரிழிவு நோய் மருத்துவர் ஆர். பாலமுருகன் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதியன்று டிடி தமிழ் (பொதிகை) தொலைக்காட்சியில் ”ஹலோ உங்களுடன்” நிகழ்ச்சியில் நேரடி உரையாற்றவுள்ளார்.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ”சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியுமா? வந்தால் மீள முடியுமா?” என்ற தலைப்பில் அவர் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
மருத்துவர் ஆர். பாலமுருகன், கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைமை மருத்துவராகவும், கோயம்புத்தூர் இந்திய மருத்துவ சங்க இணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்கத்தின் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கமிட்டியின் தலைவர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் உதவி பேராசிரியர் என்பதோடு, நீரிழிவு நோயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின் போது, 81244 46622 / 94449 01011 / 81244 46611 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, நேயர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு மருத்துவரின் ஆலோசனைகளை பெறலாம்.