பொள்ளாச்சி ஆழியாறு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் கோவிந்தராஜ், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

அவரது திறமையை ஊக்குவிக்கும் விதமாக, ராம்ராஜ் காட்டன் சார்பில் ரூ.25000 காசோலை வழங்கப்பட்டது.பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன் மூலமாக இந்த தொகை வழங்கப்பட்டது.

ராம்ராஜ் காட்டன் பொள்ளாச்சி கிளை மேலாளர் ஆனந்த், ஆரஞ்சு கார்மெண்ட்ஸ் சக்திவேல் மற்றும் பொள்ளாச்சி தடகளச் சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர். ராம்ராஜ் காட்டன் வழங்கிய இந்த உதவி, தனக்கு பெருமளவில் ஊக்கம் அளிப்பதாக தலைமை காவலர் கோவிந்தராஜ் கூறினார்.