கோவை, அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது. முதல்வர் வித்யாசங்கர், துணை முதல்வர், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கார்த்திகை தீபத்தின் சிறப்புகள், அதன் பண்பாட்டு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து கூறப்பட்டது.
