வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் துவங்கப்படவுள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தாயாருக்கும் திட்டத்திற்கான டெண்டர் அட்டவணை, 8-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தகவல் படி, டெண்டர் சமர்ப்பிக்கக் கடைசி நாள் 2026 டிசம்பர் 23 (பிற்பகல் 3 மணி வரை) என மாற்றப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் மாலை 4 மணிக்கு டெண்டர்கள் திறக்கப்படும்.

கடந்த 2026 பிப்ரவரியில் திமுக ஆட்சியால் முதலில் முன்மொழியப்பட்ட இத்திட்டத்தின் டெண்டர் சமர்ப்பிப்பு காலக்கெடு, நிர்வாகக் காரணங்களால் 11.5.2026 முதல் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களின் தொடர் எதிர்ப்பும் இந்த நிர்வாக ஒத்திவைப்புகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

டெண்டர் தேதியை இப்படி மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கும் முடிவுக்கு பதிலாக திட்டத்தை கைவிடவேண்டும் என வெள்ளலூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குப்பைக்கிடங்கால் பாதிக்கப்படும் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்க என குறிச்சி – வெள்ளலூர் மாசுத் தடுப்பு குழுவின் செயலாளர் கே.எஸ். மோகன் வலியுறுத்தியுள்ளார்.

இக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெள்ளலூரில் முன்மொழியப்பட்ட குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் திரும்பப் பெற வேண்டும் என்றும், அதனுடன் தொடர்புடைய அனைத்து டெண்டர் நடவடிக்கைகளையும் தாமதமின்றி நிறுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“குப்பைக்கிடங்கில் வருடக்கணக்காக தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த பகுதி மீட்டெடுக்கப்பட வேண்டும்,” என்று மோகன் கூறினார்.