மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கோவை மாநகரில் உள்ள பீடம்பள்ளி, இரும்பொறை, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (நவம்பர் 26) மின் தடை ஏற்படவுள்ளது.

பீடம்பள்ளி துணை மின் நிலையம்

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

இரும்பொறை துணை மின் நிலையம்

இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

ஒத்தக்கால் மண்டபம் துணை மின் நிலையம்

அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.