காந்திபுரம் 100 அடி ரோடு மூலம் நவ இந்தியா செல்லக்கூடிய நேர் ரோடு இடையே ஆவாரம்பாளையம், சித்தப்புதூர் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகள் சந்திக்கின்றன.

இந்த சந்திப்பில், ஹெச்.டி. எப்.சி வங்கி அமைந்துள்ள இடம் முன்னரும், அதற்கு எதிர்புரமும் உள்ள சாலைகள் பொது பணிகளுக்காக தோண்டப்பட்டன. அதில் எதிர்ப்புறம் இருந்த சாலை உடனே சீரமைக்கப்பட்ட நிலையில், வங்கி முன்னர் உள்ள குழி மட்டும் மூடப்படாமல் இருந்தது.

2b 8 scaled

நவ இந்தியா வழியே வரக்கூடிய வாகனங்கள், உமன்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி வழியே ஆவாரம்பாளையம் நோக்கி கணபதி செல்லக்கூடிய வாகனங்கள் பலவும் இந்த சந்திப்பை பயன்படுத்துவதால், இந்த வழியே வாகன போக்குவரத்து இயல்பாகவே அதிகம் இருக்கும்.

மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் இவ்வழியே அமைந்துள்ளதால் இந்த வழியே தோண்டப்பட்ட குழி, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருந்தது.

2a 9 scaled

இந்த நிலையில், இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கருத்தை வெளிகொண்டு வரவும், இந்த பிரச்சனையை மாநகராட்சியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும்  ‘தி கோவை மெயில்’ செய்தியும், காணொளியும் வெளியிட்டிருந்தது.

அதையடுத்து, தற்போது அந்த இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழி மூடப்பட்டுள்ளது. விரைவாக இந்த சாலையை முற்றிலுமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், 100% பாதுகாப்பானதாக இந்த சாலை மாறும்.