கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகள் மற்றும் களப்பணிகளால் ஈர்க்கப்பட்டு, துபாய் தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலிகளும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் எம்.எல்.ஏ கனிமொழி வழங்கினார்.
துபாய் தவெக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதி அனிருத் பேசுகையில்: எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து ஆற்றி வரும் மக்கள் நலப்பணிகள் எங்களை மிகவும் ஈர்த்தன. இதன் காரணமாகவே இந்த தொகுதிக்கு நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம்.
வரும் காலங்களிலும் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் அவருடன் இணைந்து தொகுதி மக்களுக்கு வழங்கி, மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். மேலும், துபாய் வாழ் தவெகவினர் அமைப்பின் வாயிலாக வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழகத் தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம் என்றார்.
