கோவை போத்தனூரில் இருந்து பீகார் மாநிலம் ரசால் ரயில் நிலையத்துக்கு ஒரு வழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து நவம்பர் 11-ம் தேதி (புதன்கிழமை) இரவு 8.20 மணிக்கு இந்தச் சிறப்பு ரயில் (எண்: 06135) புறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் வழியாகப் பயணித்து, நவம்பர் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பீகார் மாநிலம் ரசால் ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, ராஜமுந்திரி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சாம்பல்பூர், ரூர்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, மூரி, பொகாரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூர், பரௌனி உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
