கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரங்களில் துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயல்பு பணிகள் பாதிக்கப்படும். எனவே மின்வாரியம் முன்கூட்டியே மின்தடை எங்கு, எப்போது நடைபெறவுள்ளது எனும் விவரங்களை வெளியிடும்.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி நாளை (11.11.26) கோவை மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் மத்தம்பாளையம் துணை மின் நிலையம் கீழ் பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணர்பாளையம் ரோடு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதை தவிர்த்து கோவை மாவட்டத்தில் வேறு எங்கும் மின் தடை ஏற்ப்படவுள்ளதாக மின் வாரியம் அறிவிக்கவில்லை. கோவை தெற்கு மண்டல பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள மின்தடை விவரங்கள் எதுவும் மின்வாரியத்தால் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது கவனிக்கவேண்டியது.

