இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) மாணவர்கள், தேசிய சாகச முகாமில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களில், கோவை இந்துஸ்தான் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பாலமுருகன், தர்ஷினி ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் இமாச்சலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் நவம்பர் 18 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய சாகச முகாமில் பங்கேற்க உள்ளனர்.

கல்லூரியில் பயிலும் காலத்தில் மரக்கன்றுகள் நடுதல், ஆதார் அட்டை புதுப்பித்தல், ரத்ததான முகாம்கள் நடத்துதல், அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, தூய்மை இந்தியா திட்டப் பணிகள், மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சமூக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இருவரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களின் சிறப்பான சமூகப் பணிகளைப் பாராட்டி மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் இந்தச் சாதனையைப் பாராட்டி, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, கல்லூரி முதல்வர் ஜெயா, பேராசிரியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.