கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மதியம் முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.

மாநகரின் முக்கியப் பேருந்து நிலையத்தில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலைய வளாகத்தில் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது.

5b 6 scaled

சிங்காநல்லூர் பேருந்து நிலைய வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால்
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் வெள்ள நீரில் மிதந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

தென் மாவட்டங்கள் மற்றும் திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தினசரி வந்து செல்லும் இந்த முக்கியப் பேருந்து நிலையத்தில், மழைக்காலத்தில் இதுபோன்ற சூழல் நிலவுகிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எதிர்காலத்தில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர வடிகால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.