கோவை, துடியலூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை திறப்பு விழாவுக்கு முன்பே சேதமடைந்த நிலையில், மேற்கூரை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த மேற்கூரையை உடனடியாகச் சீரமைக்கவும், விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கனிமொழி எம்.எல்.ஏ வலியுறுத்தி இருந்தார்.

சேதமடைந்த மேற்கூரை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தைப் பாதுகாப்பான முறையில் மக்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என அவர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் கட்டமைப்புகள் தரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளின் தரத்தில் அலட்சியம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
