வடகிழக்கு பருவமழையோட்டி, அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், கோவை மாநகராட்சி சார்பில், அனைத்து மண்டல அலுவலர்கள் தலைமையில் களப்பணியாளர்கள், களப்பணியில் ஈடுபட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.
மழைக்காலங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாநகராட்சி சார்பில், 8190000200 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு வரும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படுகிறது.
மேலும், வடகிழக்கு பருவமழையையொட்டி, மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும், பொதுமக்கள், மழை தொடர்பான புகார்களை எளிதாக தெரிவிக்கும் வகையில், மண்டல கட்டுப்பாட்டு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மண்டலத்தில் 0422 – 2577217 என்ற எண்ணிலும், வடக்கு மண்டலத்தில் 0422 – 2243133 என்ற எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் 0422 – 2553100 என்ற எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் 0422 – 2252705 என்ற எண்ணிலும், மத்திய மண்டலத்தில் 0422 – 4709525 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
