ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சித்தரஞ்சன், தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அகில இந்திய தடகள சம்மேளனம் மற்றும் ராஜஸ்தான் மாநில தடகள சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் 6வது இந்திய ஓப்பன் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான தடகள போட்டிகள் மூன்று நாட்கள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் சித்தரஞ்சன் 7.64 மீட்டர் நீளம் தாண்டி, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மாணவர் சித்தரஞ்சனை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
