கோவை நகைச்சுவை சங்கத்தின் 33வது நிகழ்ச்சி நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜே. எஸ். புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். ஜெயசந்திரா பேரிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

9a 6 scaled

சிறப்புரையில் ‘சிரிப்பின் சிறப்பு’ என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் பேசியதாவது: இன்றைய அறிவியல் வளர்ச்சியில் ஒவ்வொரு மனிதனுக்கும் நம் கையில் இருக்கும் மொபைல் போன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல நன்மைகளைக் கொடுக்கிறது. அதை யாரும் மறுக்க இயலாது. ஆனால், அதனால் ஏற்படும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கிறது.

எந்த விஞ்ஞான முன்னேற்றம் வந்தாலும், நாம் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சி, சிரிப்பு ஆகியவைகளை மறக்கக்கூடாது. எந்தவிதமான இடர்பாடுகள் வந்தாலும், அதை சிரித்த முகத்துடன் கையாள பழகிக்கொள்ள வேண்டும். நகைச்சுவை எல்லா பக்கமும் பரவிக்கிடக்கிறது. அதை நாம் பக்குவமாக எடுத்துக் கொள்ள வேண்டும்,

பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்றோர், தங்களின் அரசியலில் எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், நகைச்சுவை உணர்வால் எப்படி கையாண்டார்கள் என பேசினார்.

கோவை நகைச்சுவை சங்கத்தின் செயலாளர் தனபால், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.