உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு, காளப்பட்டி நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

6e scaled

டென்எக்ஸ் ஹெல்த் டெக்னாலஜிஸ், கிகிள் கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. பேச்சுப் போட்டி, ஓவியம் மற்றும் நாடகம் உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

6c 2 scaled

சோப்பால் கைகழுவுவது வயிற்றுப்போக்கு நோய்களை 50% வரையிலும், கடுமையான சுவாசத் தொற்றுகளை 25% வரையிலும் குறைக்கிறது என்பதை பொது சுகாதார ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 மில்லியன் குழந்தை மரணங்களுக்கு நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு முக்கிய காரணங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

6b 4 scaled

கிகிள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சிந்துரி அனந்த் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராயல்கேர் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மற்றும் நியூரோ சோனாலஜிஸ்ட் டாக்டர் விஜயன், இளம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கை கழுவுதலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

6a 6 scaled

டென்எக்ஸ் ஹெல்த் டெக்னாலஜிஸ் நிறுவனர் அனந்தபத்மநாபன் பேசுகையில்: சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுவது மனித சமுதாயத்தில் கிடைக்கும் மிகவும் செலவு குறைந்த மருத்துவ தலையீடாகும். வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சரியான பழக்கங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் சுகாதார விழிப்புணர்வை நாம் உருவாக்குகிறோம். என்றார்.